Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன. போர்ச்சூழல் காரணமாக, 1994ஆம் ஆண்டிற்குப் பின்னர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து யாழ் போதனா மருத்துவமனைக்கு அருகிலான சிக்னல் சந்தி, மருத்துவமனை வீதியூடாக கடல் வரையான பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
கடற்கரை பகுதியிலும் நீர் வழிந்தோடுவதற்கான இடங்கள் சுத்தமாக்கப்பட்டு வருகின்றன. யாழ் மாநகர சபை ஆணையாளர், யாழ் மாநகர சபையின் வேலைப்பகுதிக்கான பொறியியலாளரின் நேரடி வழிகாட்டலில் மேற்பார்வையாளர் பி.ஜெயராஜின் மேற்பார்வையில் புதிதாக மாநகர சபை வேலையில் இணைத்துக் கொள்ளப்பட்ட முப்பது தொழிலாளர்களினால், இவ்வேலைகள் நடைபெறுகின்றன.
அத்துடன் ஏற்கனவே குருநகரின் சென்றோட் வடிகால், அண்ணாசிலையடி வடிகால், றூபிளான் வடிகால், றெக்கிலேன் வடிகால், பழைய நீர்த்தாங்கி வடிகால் என்பன துப்பரவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நொத்தாரிஸ் லேனில் இருந்து கண்டி வீதி, இலந்தைக்குளம், கொழும்புத்துறை ஊடாக கடலில் கலக்கின்ற வரையான வடிகால்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. மழை காலத்தினை கருத்திற்கொண்டு வடிகால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டம் யாழ் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
34 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago