2025 நவம்பர் 05, புதன்கிழமை

வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுத்து நிறுத்த கோரி மகஜர்

Editorial   / 2022 டிசெம்பர் 14 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில்  கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை  கடற்படைதளத்திற்கென நிரந்தரமாக  காணியை சுவீகரிப்பு செய்ய   அளவீடு செய்ய முற்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்றைய தினம் (14.12.2022) முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபருக்கான மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இந்த மகஜரினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி) ஆகியோரிடம் கையளித்தனர்.

இன்று காலை முதல் வட்டுவாகல் கடற்ப்படை முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது எதிர்ப்பை மீறி கடற்படை வாகனம் ஒன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச அதிகாரிகளை அழைத்து சென்று கொழும்பில் இருந்து வருகை தந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளால் நில அளவீடு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறு மக்கள் மகஜர் கையளித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X