2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வட்டுவாகல் சப்த கன்னியர் கோவிலுக்கு சிக்கல்

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று, வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் கோவில் வளாகத்தை அபகரித்துள்ள இராணுவத்தினர், அப்பகுதியில் பாரிய பௌத்த விகாரையொன்றை நிர்மாணித்திருப்பதால், கோவிலின் நாளாந்தக் கிரியைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட காலந்தொடக்கம் இன்று வரை, இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் தெரியப்படுத்தியும், இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், கோவில் கிரியைகளை செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்வதாக, நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சப்த கன்னியர் கோவில், வரலாற்றுச் சிறப்புமிக்க பன்னெடுங்காலம் பழமைவாய்ந்த கோவிலாகும். இருப்பினும், இந்தக் கோவில் வளாகமானது, யுத்தத்தின்போது இராணுவத்தால் அபகரிக்கப்பட்டது. அந்தக் காணியிலேயே, இந்தப் பாரிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒரு பௌத்த மதத்தவர் கூட இல்லாத பழம்பெரும் கோவில் கிரியைகள் இடம்பெறும் வளாகத்தில், இராணுவத்தினரால் விகாரை அமைத்துள்ளமை தொடர்பில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மட்ட அமைப்புகளால் பல்வேறு தரப்பினருக்குத் தெரியப்படுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .