2025 மே 08, வியாழக்கிழமை

‘வன்னி எம்.பி சிலருக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாது’

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வன்னியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இங்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் உள்ளனரென்று, வன்னி மாவட்ட நாடாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் குற்றஞ்சாட்டினார்.

வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியை உள்ளடக்கி நடைபெற்று வரும் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள் தொடர்பில் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தினையில் இலங்கை பூராகவும் அபிவிருத்தி செய்வதற்கான கூட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் பிரதேசங்களுக்கு நிலையான திட்டமிட்ட அபிவிருத்தியை செய்ய வேண்டும் என்பதனால் இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் கூறினார்.

தமது பிரதேசத்துக்குத் தேவையான அபிவிருத்திகளை தாங்கள் ஏற்கெனவே அடையாளங்கண்டு, வழங்கியதன் அடிப்படையில், தற்போது அது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றதாகத் தெரிவித்த அவர், இதனூடாக பாரிய அபிவிருத்தியை செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஜனாதிபதியால் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறான நிலையிலேயே எதிக்கட்சியில் இருப்பவர்கள் தமக்கு எதிரான கருத்துகளையே சொல்லி வருகின்றனரெனத் தெரிவித்த மஸ்தான் எம்.பி, தாங்கள் தங்கள் பகுதியின் அபிவிருத்திகளைப் பார்க்க வேண்டுமெனவும் கூறினார்.

'அமைச்சர் குழு அவசரமாக செய்யக்கூடிய வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தி கொடுத்துள்ளனர். அது தொடர்பான விவரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது.

'ஆனால், இங்குள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதே தெரியாமல் உள்ளனர்' எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X