Niroshini / 2021 நவம்பர் 02 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை, ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற விவசாயி ஒருவர், நேற்று (01) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
36 வயதுடைய முள்ளியவளையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ரவிச்சந்திரன் என்ற விவசாயியே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட முல்லைத்தீவு பொலிஸார், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைந்துள்ளனர்.
குறித்த விவசாயி, பாம்பு தீண்டி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago