எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மே 03 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வை தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேர் உள்ளடங்களாக 11 உறுப்பினர்கள் பகிஸ்கரித்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வு இன்று (03) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக்கட்சி, ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்ஸீம் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 2 பேர் உட்பட 11 உறுப்பினர்கள் குறித்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago