2026 மே 14, வியாழக்கிழமை

dd

வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் குழு

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வவுனியா இலுப்பையடி பகுதியில், வர்த்தகர்களிடம் குழுவொன்று பணம் பறித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை வேளையில் மதுபோதையில் வரும் குழுவொன்று, அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் பணம் கேட்பதாகவும் தர மறுக்கும் பட்சத்தில் குறித்த வர்த்கர்களுடன் தகராறில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அண்மையில் குறித்த குழுவினர் பணம் வழங்க மறுத்த வர்த்தகருடன் தகராறில் ஈடுபட்ட நிலையில், பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் குறித்த பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக சில நாட்களாக பணம் பறிக்கும் செயற்பாட்டை நிறுத்தியிருந்த குறித்த குழு, தற்போது மீண்டும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மக்கள் நடமாட்டம் குறையும் வேளையிலேயே தாம் கடைகளை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .