2025 மே 08, வியாழக்கிழமை

வலையில் சிக்கும் பியர் ரின்கள்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

சாராயப் போத்தல்களாலும் பியர் ரின்களாலும் நிரம்பி வழியும் குளமாக கிளிநொச்சி குளம் காணப்படுகின்றது. 

இக்குளத்தின் பகுதியில் பெருமளவு மதுப்பிரியர்கள், தாங்கள் அருந்தும் சாராய மற்றும் பியர் ரின்களை குளத்தில் வீசுவதனால் குளத்தில் எந்நேரமும் சாராய, பியர் ரின்கள் மிதப்பதைக் காணலாம்.

நன்னீர் மீன்பிடிக்காக வலை விரிக்கும் மீன் பிடியாளர் ஒருவரின் வலையில் மீன் அகற்றப்படுகின்றதோ இல்லையோ, பியர் ரின்களும் சாராயப் போத்தல்களும் வலையில் சிக்குகின்ற அவலம் தொடர்கின்றது. 

கிளிநொச்சி குளம் சுற்றுலா மையமாக உருவாக உள்ளது.  தற்போது இரணைமடுக் குளத்தில் இருந்து இக்குளத்துக்கு நீர் வழங்கப்பட்டு, கிளிநொச்சி நகரத்துக்கான குடிநீர் வழங்கலுக்காக அருகில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானங்கள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கிளிநொச்சி நகரத்தின் கழிவுகள் இக்குளத்தின் சூழலில் கொட்டப்படுவதும் குளத்துக்குள் பியர் ரின்கள், சாராயப் போத்தல்கள் மிதப்பதைத் தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X