Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 16 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதியில் அமைந்துள்ள கந்தனார் வீதி சுமார் 12 மில்லியன் (12, 436, 221 ரூபாய்) ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகின்றது
வடக்கு - கிழக்கு உள்ளுர் வீதிகளை மேற்படுத்தும் திட்டத்தின் கீழ, இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவியின் கீழ், வளலாய் மேற்கையும் வடக்கையும் இணைக்கும் 1.8 கிலோமீற்றர் நீளமான இந்த வீதி திருத்தப்படுகின்றது.
இராணுவ கட்டுப்பாட்டில் இந்தப் பிரதேசம் இருந்தபோது இந்தவீதி முற்றாக மறைக்கப்பட்டதுடன் பொதுமக்களின் தோட்டக் காணிகள் ஊடாக இராணுவத்தினர் தமது போக்குவரத்தை மேற்கொள்ள புதிய வீதியை அமைத்திருந்தனர்.
குறித்த காணி, இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து மறைக்கப்பட்டிருந்த வீதி, பொதுமக்களின் உதவியுடன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .