Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று (04) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
கிராமிய பெண்கள் அமைப்பு, கிராம முகாமைத்துவ சம்மேளனம், சர்வமதக்குழுக்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகாவித்தியலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த அமைதிப்பேரணியானது, வவுனியா பொது வைத்தியசாலை சந்தியை வந்தடைந்து, அங்கிருந்து பசார் வீதி வழியாக காணாமல் ஆக்கப்பட்ட உறுவுகளின் தாய்மார்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் வவுனியா தபால் கந்தோர் முன்பாகவுள்ள கொட்டகையை வந்தடைந்தது.
அமைதிப்பேரணியின் முடிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கிராமிய பெண்கள் அமைப்பு மற்றும் சர்வமத குருமாரால் ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு கோரி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago