Editorial / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்
“அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் வவுனியா கிளையால் கலை இரவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் ப.வைஷ்ணவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பல்வேறு துறைகளில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் கலை தொடர்பான செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டாலும் கூட, கலைச்செயற்பாட்டின் ஊக்;குவிப்பை கருத்தில் கொண்டு வவுனியாவில் குறும்பட போட்டி நிகழ்வுகள், பட்டிமன்றம், இசையும் நடனமும் உட்பட பல கலை நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே எதிர்வரும் 8 ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கோருகின்றோம்” என தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago