Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம், வவுனியா மாவட்டச் செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடத்தில், இன்று (09) நடைபெற்றது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இக்ககூட்டத்தில், சமூக உட்கட்டமைப்பு குழுவாhல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், எதிர்வரும் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன், மாவட்டத்துக்கு; காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளால் எடுத்துரைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களால் அப்பிரச்சினைகள் தொடர்பில் பதிலளிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பிரியங்கர ஜயரத்ன, சிசிர ஜயகோடி, சரத் வீரசேகர, பியல் நிசாந்த, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சார்ள்ஸ், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகதரலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago