2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் தொற்றாளர்கள் அதிகரிப்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

என்றும் இல்லாத வகையில் தொற்றாளர்கள் அதிகரிக்கும் மாவட்டமாக வவுனியா மாவட்டம் மாறி வருவதாகத் தெரிவித்த வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், இந்நிலையில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கோரினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  வவுனியா மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து செல்வதாகவும் இது மாவட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் கூறினார்.

வவுனியா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளர்களில் கணிசமானவர்களுக்கு கொரனா தொற்று இருப்பது அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வவுனியா வைத்தியசாலையில் புதிய கொரனா தொற்றாளர்களுக்கான விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதெனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வைத்தியசாலையில், ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான நிலைமைகள் கொரோனா தொற்றாளர்கள் தவிர்ந்த ஏனைய நோயாளர்களின் சுகாதார தேவையை நிவர்த்திப்பதில் கடும் சிக்கல் நிலையை தோற்றுவிக்கும் வாய்ப்புள்ளதெனவும் கூறினார்.

இதேவேளை, 'சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆட்பட வேண்டியுள்ளமையால் சுகாதார துறைக்கும் பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் உருவாகும் என்பதால், மக்கள் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும்' எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X