Freelancer / 2023 ஜனவரி 02 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா - வைரவப்புளியங்குளம், முதலாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் வீட்டில் நேற்று (01) இரவு வீடு உடைத்து திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தேவையின் நிமித்தம் வீட்டிலுள்ள அனைவரும் கொழும்புக்கு சென்றிருந்த சமயத்தில் நேற்றிரவு வீட்டின் பின்பக்கமாக சென்ற திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து பணம் மற்றும் நகை ஆகியவற்றினை எடுத்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை வீட்டினை திறந்த போது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமையடுத்து வீட்டின் உரிமையாளரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த திருட்டுச் சம்பவத்தின் போது 6 1/2 பவுன் நகை மற்றும் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R
51 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
09 Nov 2025