2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் பண்பாட்டுவிழா

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பண்பாட்டுப் பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வு, நேற்று, வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

வடமாகாணத்தில் இருக்கும் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகம் போன்றவற்றில் வருடாந்தம் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்று வருகின்றது.

பேராசிரியர் நா.சண்முகலிங்கள் தலைமையில் ஆரம்பமான முதள் நாள் நிகழ்வில், கலைநிகழ்வுகள், சிறப்பு ஆய்வரங்கு இளங்கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

அதே வேளை இரண்டாம் நாள் நிகழ்வாக பட்டிமன்றம், கவியரங்கம், பண்பாட்டு ஊர்வலம் கலை நிகழ்வுகள் சிறந்த நூற்பரிசு வழங்கல் நிகழ்வும் கலைக்கு பரிசில் விருதுவழங்கல் நிகழ்வும் நடைபெற்றன.

நேற்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா, பிரதேச செயலாளர் கா. உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உதவிப்பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கம், கலைஞர் வேல் ஆனந்தன், ஓய்வு நிலை சிரேஸ்ட விரிவுரையாளர் மு. கௌரிகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X