Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் சுயாதீன இளைஞர்களால் பனை விதைக்கும் செயற்பாடு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
2017ம் ஆண்டு தொடக்கம் சுயாதீன இளைஞர்களால் ஒவ்வொரு ஆண்டும் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பனை விதைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்தல், எதிர்கால மாணவர்கள் மத்தியில் சிறப்பான பொழுது போக்கினை ஏற்படுத்தல், மற்றும் பாரம்பரிய உணவினை மீட்பது போன்ற விடயங்களை நோக்காக கொண்டு பனை விதைப்பு நடவடிக்கையினை சுயாதீன இளைஞர்களால் வருடம்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக இவ்வருடம் வவுனியா குளக்கட்டுப்பகுதியில் பனை விதைகளினை விதைப்பதற்கான செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிகழ்வில் சுயாதீன இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago