Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டு வீதி பகுதியில் வசித்த 75 வயதுடைய பெண்ணொருவர், இன்று (23) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிப பெண், தனது சகோதரனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். சகோதரன் நேற்றைய தினம் வயலுக்கு சென்ற நிலையில், இன்று காலை உணவினை தனது சகோதரிக்கு வழங்குமாறு அயல் வீட்டில் உள்ளவர்களிடம் அலைபேசி ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார்.
அவருக்கு காலை உணவு வழங்குவதற்காக இளைஞன் ஒருவர் அங்கு சென்ற நிலையில், குறித்த பெண்ணின் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
30 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
33 minute ago
41 minute ago