2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் பெண் பொலிஸின் தங்கச் சங்கிலி அபகரிப்பு; இருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா பூந்தோடம் அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வழிபடச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் முத்துமாரி அம்மன் கோவிலில் கடந்த சனிக்கிழமை வழிபடச் சென்ற பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருடன் இணைந்து சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நேற்று  (27) மாலை இளைஞர் ஒருவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மற்றறைய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள்  முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X