Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், கடந்த ஆறு நாள்களாக 128.6மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று (09) நேற்று முன்தினம் (08) மாலை வேளையில், இடிமின்னலுடன் மழை பெய்து வருகின்றது.
மாலை வேளைகளில் மழை மேலும் பெய்யக்கூடும் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு, வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.
4ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து 5ஆம் திகதி காலை 8.30 மணிவரையும் 7.5மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், 6ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து 7ஆம் திகதி காலை 8.30 மணிவரையும் 45.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
7ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து 8ஆம் திகதி காலை 8.30 மணி வரையும் 3.5 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், 8ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து 9ஆம் திகதி காலை 8.30 மணிவரையும் 26.6மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
9ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து 10ஆம் திகதி காலை 8.30 மணிவரையும் 45.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் கடந்த ஆறு நாள்களாக 128.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி, வவுனியாவில் பதிவாகியுள்ளது.
மழையுடனான வனிலை நீடிப்பதுடன், மாலை வேளைகளில் பெய்துவரும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு, வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
51 minute ago
55 minute ago
3 hours ago