Editorial / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - உக்குளாங்குளம் பகுதியில் வேளாங்கன்னி மாதா சிலை, இனந்தெரியாதோரால் உடைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், நேற்று (23) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில், கடந்த 25 வருடங்களுக்கும் மேலாகக் காணப்பட்டு வந்த வேளாங்கன்னி மாதா சிலை, அப்பகுதி கிறிஸ்தவ மக்களின் வணக்கத் தலமாகவும் காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூண்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த சிலை எரியூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்ணாடிக் கூண்டுக்கு வெளியில் காணப்பட்ட சிறிய சிலையொன்றும் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, பண்டாரிக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago