2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வவுனியாவில் மாத்தளை இளைஞன் கைது

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, பஸ் நிலையத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த, மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை, வவுனியா வவுனியா போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுப் பொலிஸார், இன்று (30) காலை 10.30 மணியளவில் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து, 4 கிலோகிராமும் 96 கிராமும் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கிச் செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞனின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த வவுனியா போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுப் பொலிஸார், வவுனியா பஸ் நிலையத்தில் வைத்து, அவரது பையைச் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது, அதில் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, வவுனியா போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .