Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு கோரியும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனத் வலியுறுத்தியுமே, இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன் ஆரம்பித்த இப்பேரணி, நகர மத்தியின் ஊடாக பண்டாரவன்னியன் சிலையருகில் நிறைவு பெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிர்மலனாதன், வடக்கு விவசாய அமைச்சர் க. சிவநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், இந்திர ராஜா, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா, தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன், யாழ். மாநகரசபை உறுப்பினர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago