2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் மாபெரும் ஊர்வலம்

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இந்து மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில், வவுனியாவில் இன்று (01) காலை, மாபெரும் ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா - குருமன்காடு காளி கோவில் முன்றலில் இருந்து காலை 08.30 மணியளவில் ஆரம்பமான இந்த ஊர்வலம், குருமன்காட்டு சந்தி ஊடாக வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலை சென்றடைந்து நிறைவடைந்தது.

பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்து மதம் சார்ந்த புராதண இடங்கள் எல்லாவற்றிலும் இந்து மதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவன செய்தல், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றைய வகுப்புகள், நிகழ்வுகளை தடைசெய்து  அறநெறியை வளர்த்தல், வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளுக்கு, கிராமங்களுக்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள், காலக்கிரமத்தில் மாற்றப்படுகின்றன. அவற்றையெல்லாம் நீக்கப்பட்டு தமிழ் மொழி சார்ந்த பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும், கோவில்கள், நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடைமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் நல்லை ஆதினத்தின் இரண்டாம் குருமகாசந்நிதானம், அகில இலங்கை இந்துசாசனத்தின் தலைவர் ஐயப்பதாசக்குருக்குள், வேலர் சுவாமிகள் முத்துஜெயந்திநாத குருக்கள் ,பிரபாகரக்குருக்கள், தமிழருவி சிவகுமாரன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்து மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, இந்து கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வாகன ஊர்தி பவனியும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .