2025 மே 22, வியாழக்கிழமை

வவுனியாவில் மூன்று நிலையங்கள் மட்டுமே பதிவு

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் 100க்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் மூன்று நிலையங்கள் மட்டுமே பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு நகரசபைக்கு வருடா வருடம் தொழில் வரி செலுத்தி வருவதாக, நகர சபையினர் தெரிவிக்கின்றனர்.

தகவல் அறியும் சட்டத்தினூடாக நகசரபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட நிலையங்களின் விவரங்களை கோரியபோதே, மேற்கண்டவாறு நகர சபையால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்ற நிலையில், பிரதேச செலயகத்தில் பதிவு செய்யப்பட்டு, நகரசபைக்கு தொழில் வரி செலுத்திவரும் தனியார் கல்வி நிலையங்களாக மூன்று நிலையங்கள் மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நகரில் இயங்கும் பல தனியார் கல்வி நிலையங்களை அரச சேவையிலுள்ள ஆசிரியர்களே இயக்குநர்களாக வழிநடத்தி வருகின்ற நிலையில், அரச சட்டங்களை நடைமுறைப்படுத்தி பிரதேச செயலகம், நகரசபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட தவறியுள்ளதையே இவ்விடயம் எடுத்துக்காட்டி நிற்கின்றது. 

மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை தமது தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. வசதிகளற்ற நிலையங்களை அமைத்து மாணவர்களிடம் பணம் கற்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வரும் கல்வி நிலையங்களை நடத்திவரும்  தனியார் கல்வி நிர்வாகத்தினர் நகரிலுள்ள சட்டதிட்டங்களை பின்பற்றத் தவறியுள்ளதாக, நகர சபையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X