Editorial / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
உள்ளக பாதுகாப்பு மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வவுனியாவுக்கு இன்று (01) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, 55 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதில் பிரதேச ரீதியாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது.
இதில், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கு.திலீபன், காதர் மஸ்தான், ரிஷாட் பதியூதீன், மாவட்டச் செயலாளர் சமன் பந்துலசேன, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன, வட மாகாண மற்றும் வன்னி மாவட்ட சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago