Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 03 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, வவுனியாவுக்கு பிசிஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில், இன்று (03) நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வவுனியாவில், கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பிசிஆர் இயந்திரம் இல்லாத நிலையில், யாழ்ப்பாணத்துக்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக, சுகாதாரத் தரப்பு, இந்தச் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியது.
அத்துடன், அதனை இயக்குவதற்குரிய ஆளணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது ந்த் இயந்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும், அமைச்சர் கேட்டறிந்துகொண்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அமைச்சர், வவுனியாவுக்கு பிசிஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், வவுனியாவில் சுகாதார துறையினரின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் கூறினார்.
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்தமையால் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது,
'பாணந்துறை முதல் வடக்கு நோக்கி மாஓயா வரை பாதிப்பு இருந்தது. அது இயல்பாகவே வெகு விரைவில் இல்லாமல்போய்விடும பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 5இ000 ரூபாய் வழங்கப்படுகின்றது. பாதிப்புகளைப் பார்த்து மேலும் உதவி வழங்கப்படும்' என்றும், டக்ளஸ் தெரிவித்தார்
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago