Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 மார்ச் 19 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்கள, சங்கங்கள் எவையும் இன்றைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் வவுனியா நகரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டம் செயலிழந்து காணப்படுகின்றது.
வடகிழக்கில் இன்று (19) கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கிலுள்ள காணாமல் போன உறவுகள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (18) மாலை வரை வவுனியாவிலுள்ள பொது அமைப்புக்கள் எவையும் உத்தியோகபூர்வமாக கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் இன்றைய போராட்டம் வவுனியாவில் பிசுபிசுத்துப்போயுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பாடசாலைகளில் மாணவர்கள் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டுள்ளதுடன் தினச்சந்தை வியாபாரிகள் தமது வியாபார நிலையங்களை மூடியுள்ளனர். பசார் வீதியிலுள்ள வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டு வழமையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அரச திணைக்களங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு வழமையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago