2025 மே 08, வியாழக்கிழமை

வவுனியா ஆசிரியர் சங்கங்களும் விலகல்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

ஆசிரியர்களின் சம்பள முரன்பாடு தொடர்பான போராட்டங்கள் முடிவுறுத்தப்படும் வரை அனைத்து விதமான கற்றல், கற்பித்தல் பணிகளிலிருந்தும் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக, வவுனியா மாவட்ட ஒண்றிணைந்த அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

வவுனியாவில், நேற்று  (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, சங்கங்களின் பிரதிநிதிகள், இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் இந்த சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்திலும் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு சம்மேளனத்தை உருவாக்கியுள்ளோம் எனவும் அதனூடாக போராட்டத்தினை வலுவுடையதாக மாற்ற வேண்டிய தேவை எமக்கும் உள்ளது என்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X