2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஊழியர்களால், தமது சாலைக்கு முன்னால், இன்று (18) காலை எதிர்ப்பு ஆர்ப்பட்டமொன்று மன்னெடுக்கப்பட்டது.

கடந்த மூன்று நாள்களாக, இலங்கைப் போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவது நாளாகவும் நாடளாவிய ரீதியில் பணிப்பிகஷ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில், அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ மக்களின் நலன் கருத்தி, தமது சேவையை ஆரம்பிப்பதற்காக, தமது கோரிக்கைகைள நிறைவேற்ற ஆவண செய்வோமெனத் தெரிவிக்கவில்லைடியனவும் தம்மை சந்தித்து கலந்துரையாடவில்லையெனவும் தெரிவித்தே, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் டயர்களை எரித்து தமது எதிர்பை வௌியிட்டனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், தமது போராட்டத்தின் வடிவம் மாறுமெனவும் எச்சரித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .