Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2018 நவம்பர் 27 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா நகரசபையின் உப குழுக்களில் இருந்து இராஜினாமா செய்ய தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளதாக நகரசபை உறுப்பினர் லக்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையால் மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முனைப்பு காட்டாத நிலையில் தொடர்ந்தும் மக்கள் ஆதரவை அதிகமாக பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வரமுடியாது.
உள்ளுராட்சி மன்ற விதிகளுக்கு அமைய உப குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் வேலைத்திட்டங்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்ற காரணத்தின் அடிப்படையில் மக்கள் வாக்குகளை பெற்று வெற்றி பெறாத தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்திருந்தோம்.
மக்கள் செல்வாக்கினை இழந்து கூட்டாட்சியின் மூலம் ஆட்சியை பிடித்தவர்கள் தமது கருத்துக்களையும் தமது கட்சி சார்ந்தவர்களின் கருத்துக்களையுமே முன்னிலைப்படுத்தி வரும் நிலையில்; பெயரளவிலேயே குறித்த குழுவில் நாம் பங்கேற்று வர வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே வவுனியா நகரசபையின் அனைத்து உப குழுக்களில் இருந்தும் எமது பிரதிநிதிகள் இராஜினாமா செய்யும் தீர்மானத்தை எடுத்துள்ளோம். இன்று (27) நகரசபை கலாசார குழுவில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் 3 பேர் இராஜினாமா செய்துள்ளனர் என தெரிவித்தார்.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago