2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா நகரசபை தவிசாளருக்கு பொலிஸ் பிணை

Niroshini   / 2021 ஜூன் 15 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா நகரசபை தவிசாளர் இ. கெளதமன், இன்று (15) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், வவுனியா நகரில் அமைந்துள்ள வாடிவீடு வளாகத்துக்கு விஜயம் செய்த நகரசபைத் தவிசாளர், அதற்கு சீல்வைத்திருந்தார்.

இதன்போது அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு ஊழியருடன் தலைவர் முரன்பட்டதாக தெரிவித்து, வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று நகரசபை தலைவர் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .