Freelancer / 2022 நவம்பர் 30 , மு.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க, நேற்று (29) காலை
அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
நகரசபையின் முதல் பெண் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற அவர், கிளி சென். தெரேசா
மகளிர் மகாவித்தியாலயம் பழைய மாணவியும், பேராதனை பல்கலைக்கழக கலைமானி
பட்டதாரியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பொது வைத்திய சாலை, வவுனியா வடக்கு வலயக்கல்வி, பிராந்திய சுகாதார
வைத்திய அதிகாரி அலுவலகம், நகரசபை ஆகிய இடங்களில் நிர்வாக உத்தியோகத்தராகவும்
கடமையாற்றியுள்ளார்.
முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையில் 16 வருடங்கள் அதி சிறப்பாகவும் அரச சேவையில் 28
வருடங்களாகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. R
48 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago