2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கணனி மயப்படுத்தல்

க. அகரன்   / 2019 ஜனவரி 17 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்கள் பதிவு செய்யும் முறைமை இன்று (17) முதல் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.

நோயாளர்களின் நன்மை கருதி பதிவு, மருந்து வழங்கும் நடவடிக்கைகள் உட்பட அனைத்தும் இன்று முதல் புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலகுவாக நோயாளர்களின் விபரங்களையும் அவர்களின் நோய்களையும் இலங்கையில் எப்பாகத்திலிருந்தும் பார்வையிட்டுக்கொள்ளக்கூடிய வகையில் இப் புதிய தொழிநுட்ப முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ள வருபவர்களுக்கு வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் வழங்கப்படும் கணனி சிட்டையை கொண்டுவரும் பட்சத்தில் வைத்தியர்கள் இலகுவாக கிசிச்சையை மேற்கொள்ள முடியும் என்று வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவித்தன.

இதனால் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் சிரமமின்றி தமது நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .