2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியா மக்களுக்காக ஜனாதிபதிக்கு செல்வம் கடிதம்

Niroshini   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் உள்ள பல குடும்பங்களுக்கு, 5,000 ரூபாய் உணவுப்பொதி கிடைக்கவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப்பபொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக, ஜனாதிபதிக்கு, செல்வம் எம்.பி அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், வவுனியாவின் திருநாவல்குளம், மகாரம்பைக்குளம், ஸ்ரீ நகர், கற்குழி, தேக்கவத்தை ஆகிய கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட இந்த ஏழை மக்களுக்கு, அரசாங்கம் வழங்க வேண்டிய 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள செல்வம் எம்.பி, எனவே இவர்ளுக்கான உணவுப்பொதிகளை வழங்க ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .