2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வவுனியா விபத்தில் நால்வர் காயம்

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா கல்குண்டாமடுவில் இன்று(1)அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ்ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குளத்தினுள் விழுந்து மூழ்கியுள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாக செயற்பட்டு வானில் இருந்து கீழே இறங்கியமையால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

குறித்த வானில் நான்கு பேர் பயணித்த நிலையில் சிறு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .