2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியா விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவி பலி

Freelancer   / 2022 நவம்பர் 05 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த யுவதியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (05) நள்ளிரவு 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மூவர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .