Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா வைத்தியசாலைக்கு, ஆப்கானிஸ்தான், ம் பாகிஸ்தான் அகதிகள் சிகிச்சைக்காக இன்று (14) பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் இரண்டு கட்டமாக அழைத்து வரப்பட்டு, வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களில்,10 பேர் வரையிலானோர் சிக்சைக்காக, வவுனியா வைத்தியசாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
சுமார் இரண்டு மணிநேரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்துகளைப் பெற்ற பின்னர், மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் இவர்களுடன் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.
எனினும், பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இந்த அகதிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்கத் தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
50 minute ago
54 minute ago
1 hours ago