2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,  பொலிஸார் இன்றையதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தகவல் கிடைக்கபெற்ற நிலையில், வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் வருகைதந்த வவுனியா பொலிஸார், தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருகின்றனர்.

இதேவேளை கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று நாளையதினம் ஆளுனரது பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X