Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
கடந்த 2006ஆம் ஆண்டு, நபரொருவரை கொலை செய்த நபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட இருவருக்கு மரணதண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.
செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நவரத்தினராசா நவரஞ்சன் என்பரின் கொலை வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில், கனகலிங்கம் செல்வரத்தினம் மற்றும் அழகன் சசிதரன் ஆகிய இருவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே வழக்கில், குறித்த குற்றச்செயல்களை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் செயற்பட்டமைக்காக, செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்தகனகலிங்கம் செல்வரத்தினம், அழகன் சசிதரன், தில்லையம்பலம் ஜெயராசா, தில்லையம்பலம் குலேந்திரராசா, தியாகராசா குமார், அந்தோனிப்பிள்ளை சுபாஸ்கரன் ஆகியோருக்கு, தலா 5 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் தண்டமும் விதித்து நீதவான் தீர்பளித்துள்ளார்.
மேலும் நவரத்தினராசா மனோராஜ் என்பவருக்கு படுகாயங்களை ஏற்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவர்களுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் தண்டமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அழகன் சசிதரன் ஏற்கெனவே வவுனியா மேல் நீதிமன்றத்தால் வேறு ஒரு கொலை குற்றச்சாட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
46 minute ago
57 minute ago
59 minute ago