2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் வெடி பொருட்கள் மீட்பு

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்,ரொமேஷ் மதுசங்க

வவுனியா மூன்றுமுறிப்பு தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று மதியம், வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றை அதன் உரிமையாளர் நீர் இறைத்து துப்புரவு செய்தபோது, கிணற்றுக்குள் இருந்து இரு தகரப் பெட்டிகளை மீட்டுள்ளார். குறித்த தகரப் பெட்டிகளில் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வெடிபொருட்களை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். ஜே.எம்.மோ கிளைமோர்- 01, மிதிவெடிகள்- 08, பரா வெளிச்சக்குண்டு- 04, டிக்னேற்றர்- 50 என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றுக்குள் மேலும் பல வெடிப்பொருட்களை அவதானித்த பொலிஸார், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த தோட்டம், வவுனியாவிலுள்ள பிரதான இராணுவ முகாமாகிய ஜோசப் முகாமுக்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .