2025 மே 23, வெள்ளிக்கிழமை

வாக்குரிமை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.தமிழ்ச்செல்வன்      

கிளிநொச்சி கல்வி வலயத்தில் கரைச்சிக் கோட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையே வாக்குரிமை பற்றி விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்று கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தில்  மாணவர்களுக்கான இக் கட்டுரை எழுதும் போட்டி இடம்பெற்றது.

தரம் எட்டு ஒன்பது மாணவர்கள் ஒரு பிரிவாக நாட்டின் எதிர்காலமும் வாக்காளர்களும் எனும் தலைப்பிலும்,  தரம் பத்து பதினொன்று இன்னொரு மாணவர்களும் பிரிவாக வாக்குரிiமையை நிலைநாட்டுவோம் எனும் தலைப்பிலும், உயர்தரம்  ஒரு பிரிவாக ஜனநாயகத்தின் ஆணிவேர் வாக்குரிமையே எனும் தலைப்பிலும்  இப்போட்டிகள் இடம்பெற்றுள்ளது.

இதில் கரைச்சிக் கோட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் வரை கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X