Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி – வன்னேரிக்குளம் பகுதியின் பிராதன வீதியைப் புனரமைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றிய கிளிநொச்சியைப் பரிதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, அப்பகுதி மக்கள் தேடிவருகின்றனர்.
பெப்ரவரி 17ஆம் திகதியன்று, வன்னேரிக்குளம் கிராமத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது கிராமத்துக்கான முதன்மை வீதி எப்போது புனரமைக்கப்படுமென, அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஐ - புரொஜெக்ட் மூலம், குறித்த வீதியைப் புனரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் ஓகஸ்ட் 20ஆம் திகதிக்குள் வன்னேரிக்குளம் முதன்மை வீதி புனரமைக்கப்படுமெனவும் பதிலளித்தார்.
அதற்கு முன் இரு வாரங்களில், அக்கராயனில் இருந்து வன்னேரிக்குளம் வரை இயந்திரங்களின் உதவியுடன் தற்காலிகப் புனரமைப்பு மேற்கொள்ளப்படுமெனவும், அவர் வாக்குறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கூறியபடி, 15 நாள்களில் அக்கராயனில் இருந்து வன்னேரிக்குளம் வரையான வீதி தற்காலிகப் புனரமைக்கப்பட்டதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள்,. ஆனால் நிரந்தரப் புனரமைப்பு ஓகஸ்ட் 20ஆம் திகதியைக் கடந்தும் இதுவரை இடம் பெறவில்லையெனவும் குற்றஞ்சாட்டினர்.
நிரந்தர வீதிப் புனரமைப்பு வேலைகள் தொடங்குவேன் என உறுதியளித்த நாடாளுமன்ற உறுப்பினரை தேடிவருவதாகவும், வன்னேரிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வன்னேரிக்குளம் கிராமத்தில் இருந்து அக்கராயன் வரையான 10 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படாமல் உள்ளதன் காரணமாக, வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 1,000 வரையான குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
48 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
48 minute ago
52 minute ago