Editorial / 2019 மார்ச் 14 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
உலக நீர் தினத்தை முன்னிட்டு, தேசிய நீர் வழங்கல் சபையால், மன்னாரில், நாளை (15) வாடிக்கையாளர் தினத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட வாடிக்கையாளர்களின் நீர் பட்டியல், நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, வாடிக்கையாளர் தினத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
இதற்கமைய, மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில், நாளைக் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது, வாடிக்கையாளரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், அதற்குரிய தீர்வுகளை மிக விரைவில் பெற்றுக்கொடுத்தல், வாடிக்கையாளரின் நீர் பட்டியல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல், வாடிக்கையாளரின் வசதி கருதி சபையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைகள் தொடர்பாக அறிவூட்டுதல் உள்ளிட்ட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago