Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், வாரத்தில் இரண்டு மூன்று பேர்வரையானவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்து வருகின்றார்கள் என, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கை.சுதர்சன் தெரிவித்தார்
புதுக்குடியிருப்பில், நடைபெற்ற விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், வடமாகாணத்தில் வீதி விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றோம். வகன சாரதிகளுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன என்றார்.
“விபத்துகளில் உயிரிழந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டுவரும்போது, அதில் வயது குறைந்தவர்கள்தான் அதிகளவில் உயிரிழக்கின்றார்கள். தற்போது இளைஞர்களின் வேகம் அவர்களின் விவேகத்தில் இல்லை. வேகமாக தமது சந்தோசத்துக்காகவே உந்துருளிகளில் இளைஞர்கள் பயணம் செய்கின்றார்கள். ஆனால் அவர்களின் குடும்பத்தையோ உயிரையோ கண்டுகொள்ளவில்லை.
“பெற்றோர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தங்கள் பிள்ளைகளை வளர்க்கின்றார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு ஒரு கடமை இருக்கின்றது, பெற்றோர்களை பிற்காலத்தில் கவனிக்க வேண்டும் என்று. குறுகிய காலத்தில் இளைஞர்கள் உயிரை இழக்கும் போது பெற்றோர்கள் அனதரவாக விடப்படுவார்கள்.
“போராட்டகாலங்களில் பல இழப்புகள் இருந்தன அது தவிர்க்க முடியாததாக இருந்தது. அந்த இழப்புகளை நாம் ஏற்கக்கூடிய மனநிலையில் இருந்தோம். இருந்தும் போராட்டத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் அனதரவாக நிக்கின்ற நிலையை நாம் கண்ணூடாக காணக்கூடியதாக இருக்கின்றது.
“இன்று வீதிவிபத்துக்களை தவிர்ப்பதற்காக நாம் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தையும் மக்கள் அனைவரும் ஒத்துளைத்து வீதி விபத்தை தவிர்ப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago