2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வாள்வெட்டில் ஈடுபட்ட இருவர் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில், வாள்வெட்டில் ஈடுபட்டிருந்த இருவர், வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதியன்று,  மதுபோதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று, இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கோடரியால் தாக்கியதில், அவ்விளைஞன் படுகாயமடைந்திருந்தார்.

எனினும்,  வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்கள் அஞ்சியதால், பொலிஸாரால் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இந்நிலையில், நேற்று (07), குறித்த தாக்குதல் தொடர்பான  காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டதை அடுத்து, விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பிரதிபொலிஸ்மா அதிபருக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து இன்று (08) அதிகாலை இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .