Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில், சுமார் 114 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றியும் வருமானங்கள் இன்றியும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வாழ்வதாக மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தேவிபுரம் அ பகுதியில் 683 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இதில் 114 வரையான குடும்பங்கள் பெண்களை தலைவர்களாக கொண்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களாகவே வாழ்ந்து வருகின்றன. மேற்படி குடும்பங்கள் யுத்தத்தின் போது கணவன்மாரை இழந்த காணாமல் போன குடும்பங்களாகவும் கணவனால் கைவிடப்பட்ட குடும்பங்களுமே அதிகளவில் காணப்படுகின்றன.
இவ்வாறான பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் 90 சதவீதமான குடும்பங்கள் தொழில் வாய்ப்புகள் இன்றியும் வருமானங்கள் இன்றியும் அன்றாடம் சொல்லனத்துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றன.
தற்போதைய வரட்சியும் அவர்களது தொழில் வாய்ப்புகள் அற்றமைக்கான காரணமாக அமைந்துள்ளது. தற்போது இந்த பிரதேசத்தில மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி கஞ்சாப் பயன்பாடுகள் என்பவற்றால் இவ்வாறான குடும்பங்களும் பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழும்; நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, எமது பகுதியில் ஏற்கெனவே வழங்கப்பட்ட மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியேறி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் 142 வரையான குடும்பங்கள் இதுவரை வீட்டுத்திட்டமோ அல்லது ஏனைய அடிப்படை உதவிகளையோ பெற்றுக் காள்ளமுடியாத நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
இதில் பெண் தலைமைத்துவ குடும்பங்களும் அதிகளவில் இவ்வாறு உதவிகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வை முன்னேற்ற அனைத்து சமூகமும் முன்வரவேண்டும் எனவும் மேற்படி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 May 2025
20 May 2025