Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, அரசபுரக்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இரு பிள்ளைகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 ஆவது படைப்பிரிவை சேர்ந்த பொறிமுறை காலாட் படையினரால், இவர்கள் நேற்று (07) மீட்கப்பட்டனர்.
அரசபுரக்குளம் வாவியில் நீராடச் சென்றபோது தாயும் பிள்ளைகளும் நீரில் மூழ்கிய நிலையில், இரண்டு படை வீரர்கள் வாவிக்குள் பாய்ந்து மூவரையும் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.
பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் D.G.S அமரசிறி, லான்ஸ் கோப்ரல் T.G.J.P ஆரியரத்ன ஆகியோரே இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு இவர்களை காப்பாற்றியுள்ளனர்.
வாவியில் மூழ்கிய மூவரும் இராணுவத்தினரது உதவியுடன் பூநகிரி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக இந்த மூவரும் யாழ். போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
11 minute ago
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 Apr 2026
20 Apr 2026