2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விசாரணைக்கு ஈஸ்வரி அழைப்பு

Editorial   / 2019 மே 25 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க தலைவிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படதாக, முல்லைத்தீவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு பொலிஸாரும் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி ம.ஈஸ்வரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ளாத நிலையில், வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறையிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்தான மனித உரிமை செயலகத்தின் அதிகாரிகளால் நேற்று (24) ம.ஈஸ்வரி விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .