சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நில அளவை திணைக்களத்துக்குரிய வாகனத்தை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளுக்காக சிவாஜிலிங்கம் அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தரவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 22 ஆம் திகதி பொதுக்கள், காணி உரிமையாளர்கள் முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிவாஜிலிங்கம், அங்கு வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தினரின் வாகனத்தை சேதப்படுத்தியதாக, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டுக்கமைய இரு தரப்பினரையும் விசாரணைக்காக இன்று (27) பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (27) பொலிஸ் நிலையத்துக்கு சிவாஜிலிங்கம் வருகை தரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இன்று (27) இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டதால், பொலிஸ் நிலையத்துக்குச் சமூகமளிக்கவில்லை” என தெரிவித்தார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago