Niroshini / 2021 நவம்பர் 08 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரி, வினாசியோடை பாடசாலைக்கு படகு மூலம் ஆசிரியர்கள் பயணிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, பூநகரி பிரதேச செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வினாசியோடை பாடசாலைக்கு ஆசிரியர்கள் சுயமாகவே சென்று வந்தனர் எனவும் போக்குவரத்து நெருக்கடி பத்து வருடங்களாக உள்ளன எனவும் அதற்கு தீர்வு காணப்படவில்லை எனவும் கூறினார்.
ஒரேயொரு பஸ் மட்டும் கௌதாரிமுனை வரை சென்று வரும் எனத் தெரிவித்த அவர், ஆசிரியர்கள் மோட்டார் சைக்கிளிலேயே சென்று வருவார்கள எனவும் கூறினார்.
'தற்போது வீதியில் களிமண் பரவப்பட்டதன் காரணமாக, எந்த வாகனங்களும் மழை நேரத்தில் பயணிக்க முடியாது. மழை ஓய்ந்தால் வாகனங்கள் பயணிக்கக் கூடிய நிலைமை ஏற்படும். இந்நிலையில், படகு மூலம் ஆசிரியர்களை ஏற்றுவதற்கான ஏற்பாடே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்திடம் படகு சேவை தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கமைய, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் இருந்து நாளை (09) இப்படகுச் சேவையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றார்.
10 minute ago
32 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
38 minute ago
1 hours ago